கொரிய போருக்கு கட்டம் கட்டும் அமெரிக்கா: வடகொரியா பகிரங்க சாடல்....

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (20:20 IST)
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், வடகொரியா அமெரிக்கா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. வடகொரியா வெளியுறவு அமைச்சக அதிகாரி பேசியதை சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...
 
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கனடாவில் நடைபெற்றது. இதில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இதில் அமெரிக்க அமைச்சர், வடகொரியாவுக்கு எதிராக கூடுதல் அழுத்தம் தரவேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
 
வடகொரியாவுக்கு எண்ணெய், தொழில்துறை பொருட்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவேண்டும், வட கொரியா அணு ஆயுத திட்டத்தை நிறுத்தும் வரையில் வட கொரியத் தொழிலாளர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. 
 
கொரிய தீபகற்பத்தில் மேலும் ஒரு போரை உருவாக்கும் வகையில் அமெரிக்க சதி செய்கிறது என்பது அந்த கூட்டத்தில் பேசிய பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்