உலக கொரோனா பாதிப்பு: 50 லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 17 மே 2020 (07:37 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,19,631 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,13,212 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,11,611  ஆக அதிகரித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலகில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதித்த நாடான அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது. அமெரிக்காவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது என்பதும், அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1218 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 276,505 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 272,043பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 240,161 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசில் நாட்டில் 233,511பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 224,760பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் 179,365பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் 90,648பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,871 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும், 34,224 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்