சூரியனுக்கு மிக அருகில்.. நாசாவின் விண்கலம் புதிய சாதனை!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (09:03 IST)

சூரியனை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று சாதனை படைத்துள்ளது.

 

 

சூரியன் குறித்த ஆராய்ச்சிகளை பல நாட்டு விண்வெளி மையங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சூரியனை அருகில் சென்று ஆய்வு செய்ய 2018ம் ஆண்டில் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ என்ற விண்கலத்தை சூரியனை நோக்கி செலுத்தியது.

 

மணிக்கு சுமார் 6,92,300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்த இந்த விண்கலம் மனிதர்களால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பொருட்களில் அதிவேகமாக பயணித்த பொருளாக சாதனை படைத்தது. இந்த விண்கலம் தற்போது சூரியனின் மிக அருகில் இதுவரை அடைய முடியாத அளவு நெருக்கத்திற்கு சென்றுள்ளது. அதாவது சூரியனிலிருந்து 6.1 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் சென்றுள்ளது.

 

இதன்மூலம், மனிதர்களால் சூரியனை நோக்கி அனுப்பப்பட்ட விண்கலன்களில் சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் என்ற வரலாற்று சாதனையை பார்க்கர் படைத்துள்ளது. சூரிய புயல் மற்றும் சூரிய துகள்கள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம் விரைவில் தனது வேலையை தொடங்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்