’ஹலோ ஹலோ.. விக்ரம் லேண்டருக்கு நாசா அனுப்பும் தகவல்

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (08:26 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதனிடமிருந்து மீண்டும் தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர் 
 
 
சூரிய ஒளிக்கதிர்கள் படும் வரையில் மட்டுமே விக்ரம் லேண்டர் செயல்படும் என்றும் 14 நாட்கள் தொடர்ச்சியாக அதனிடமிருந்து தகவல்கள் வரவில்லையென்றால் விக்ரம் லேண்டர் நிரந்தரமாக செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி நாசா விஞ்ஞானிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்
 
 
நாசாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையங்கள் கலிபோனியா, ஸ்பெயின், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 இடங்களில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு நிலையத்திலும் இருந்தும் ரேடியோ அலைகள் வாயிலாக விக்ரம் லேண்டருக்கு ‘’ஹலோ ஹலோ’ என்ற செய்தி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விக்ரம் லேண்டரிடம் இருந்து சமிக்ஞைகள் ஏதாவது தகவல் வருமா? என்று எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
 
 
மேலும் நாசாவுக்கு சொந்தமான லேசர் ரிப்ளெக்டர் என்ற கருவி விக்ரம் லேண்டரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தை சரியான கணிக்கக்கூடியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது தான் இந்த லேசர் ரிப்ளெக்டரும் தரையிறங்கும் வகையில் பொருத்தப்பட்டிருப்பதால் விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்க நாசா தீவிர முயற்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்