குருத்வாராவில் குண்டு வெடிப்பு - காபூலில் பரபரப்பு!

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (11:24 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குருத்வாராவில் நடந்த குண்டு வெடிப்பையடுத்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகரில் உள்ள குருத்வாரா அருகே இன்று குறைந்தது இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்வுகள் நடந்திருக்க கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
காபூலில் உள்ள போலீஸ் மாவட்டத்தில் உள்ள சீக்கிய இந்து கோவிலுக்கு அருகே இன்று பரபரப்பான சாலையில் இந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் உயிர் சேதம் பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குருத்வாராவில் நடந்த குண்டு வெடிப்பையடுத்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காபூலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த குருத்வாராவில் 25 - 30 இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு அக்டோபரில் 15 முதல் 20 பயங்கரவாதிகள் காபூலின் கார்ட்-இ-பர்வான் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவிற்குள் நுழைந்து காவலர்களை கட்டிப்போட்டனர். மேலும், மார்ச் 2020-ல், காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு ஹர் ராய் சாஹிப் குருத்வாராவில் ஒரு கொடிய தாக்குதல் நடந்தது, இதில் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
 
சமீபத்தில் இந்த மாத தொடக்கத்தில் ஜூன் 11 அன்று, காபூலின் பட்காக் சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்