உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் மோடி

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (09:29 IST)
செல்வாக்குமிக்க உலக தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பிடித்துள்ளார்.


 

 
2016ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 74 தலைவர்களின் பட்டியலை அமெரிக்காவின் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டது. அதில், இந்திய பிரதமர் மோடி 9வது இடத்தை பிடித்துள்ளார். 
 
அமெரிக்க அதிபர், சீன அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து  மோடி தன்னை ஒரு சர்வதேச தலைவராக நிலை நிறுத்திக் கொண்டதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு சர்வதேச அளிவில் எடுத்த முயற்சிகள், கருப்புப் பணத்தை ஒழிக்க பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது போன்ற நடவடிக்கை காரணமாக அவருக்கு அந்த இடம் கிடைத்துள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்