மைக்ரோசாப்ட் பில்கேட்ஸ் பார்ட்னர் புற்றுநோயால் மரணம்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (09:08 IST)
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களின் உயிர் நண்பரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பால் ஆனன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 65

பால் ஆனன் அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் காலமாகிவிட்டதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொழிலதிபர், நன்கொடையாளர், முதலீட்டாளர் மற்றும் மனிதநேயம் கொண்டவர் என்ற பெயர்களை பெற்ற பால் ஆலன், ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு பிரிவிற்கு தனது சொந்த பணமான ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்தவர்.

மேலும் இவர் எழுதிய 'ஐடியாமேன்' என்ற புத்தகம் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பில்கேட்ஸ் அவர்களின் வலது கையாக இருந்த பால் ஆலன் மறைவால் மைக்ரோசாப்ட் நிறுவனமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்