சாலமன் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு

Webdunia
சனி, 23 மே 2015 (11:44 IST)
சாலமன் தீவில் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
 
பசிபிக் கடல் பகுதி அருகில் உள்ள சாலமன் தீவில் இன்று அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் குலுங்கின. மேலும் கிழக்கு கீரா கீரா பகுதியிலிருந்து 224 கி.மீட்டர் தொலைவில் 37 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்துடன் காணப்படுகின்றன.
 
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.