டேட்டிங்கு லீவ் கொடுக்கும் பிரபல சீன நிறுவனம்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (16:36 IST)
வேலை செய்வதில் சிறு இடைவெளி எடுத்துவிட்டு, சீனாவின் சந்திர நாள்காட்டியின்படி, புத்தாண்டில் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்ல மில்லியன்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர்.
 
ஆனால், சில தொழிலாளர்களுக்கு வழக்கமாக இந்த புத்தாண்டில் கிடைக்கின்ற 7 விடுமுறை நாட்களோடு மேலும் 8 நாட்கள் அதிகமாக கிடைக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
 
திருமணம் ஆகாமல், 30 வயதுகளில் இருக்கின்ற பெண்களுக்கு இந்த அதிர்ஷ்டம்ட கிடைத்துள்ளது. காதலரை கண்டறிவதற்காக இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
 
ஹாங்செளவில் வரலாற்று பின்னணியிலான சுற்றுலா பூங்காவில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு டேட்டிங் விடுமுறை வழங்குவதாக சௌத் சைனா போஸ்ட் தெரிவித்துள்ளது.
 
சீனாவில் 30 வயதை நெருங்குகின்ற பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களை இழிவாக ஷெங் நு அல்லது எஞ்சிய பெண்கள் என்று அழைக்கிறார்கள்.
 
தங்களுடைய தொழில்முறை வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், திருமணம் செய்து கொள்ளாமலும் இருக்க பல பெண்கள் முடிவு செய்வதால் இந்நிலை பொதுவாக அதிகரித்து வருகிறது. எனவேதான் இந்த டேட்டிங் விடுமுறை அளிப்படுகிறதாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்