ஒரே நாளில் 2 லட்சம் பாதிப்புகள்; அதிர்ச்சியில் மக்கள்! – என்ன சொல்கிறார் அதிபர்?

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (08:50 IST)
வடகொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகாமல் இருந்து வந்தது உலக நாடுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

தற்போது வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் உறுதியாக தொடங்கியுள்ளன. அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நாட்டிற்கே முழு முடக்கம் அறிவித்தார் கிம் ஜாங் அன்.

ஆனால் வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடகொரியாவில் 2.20 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதியாகியுள்ளன.

வடகொரியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்