ஜெருசலம் நாட்டில் பாதாள கல்லறை: இடநெருக்கடியால் புதிய முடிவு

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (00:35 IST)
கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களை எரிக்காமல், புதைக்கும் வழக்கத்தை கொண்டவர்கள். இந்த பழக்கத்தால் கல்லறையில் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிய கல்லறைகள் உலகம் முழுவதும் தோன்றி கொண்டே வருகிறது.





இந்த நிலையில் ஜெருசலம் நாட்டில் முதல்முறையாக பாதாள கல்லறை கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த கல்லறையின் பணி வரும் 2018ஆம் ஆண்டு நவம்பரில் முடியும் என்றும் இந்த பாதாள கல்லறையில் சுமார் 22000 பேர் வரை இறுதியடக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பாதாள கல்லறை இந்நாட்டில் கட்டுப்பட்டு வருவதை அடுத்து இடநெருக்கடியுள்ள மற்ற நாடுகளும் இதனை கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்