பீட்ரூட்
மலச்சிக்கலை குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். கர்ப்பணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
கருணைக் கிழங்கு
கபம், வாதல், மூலம், போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கைச் சமைக்கும்போது சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அரிப்புத் தன்மை நீங்கும்.
உருளைக்கிழக்கு
கார்போஹைட்ரேட் மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. அடிவயிறு, இரப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.