ஜப்பான் பிரதமராக பதவி வகித்து வந்த ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில், அப்பதவிக்கு யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமரான ஷின்சோ அபே தனது உடல்நலக்குறைவால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதை தொடர்ந்து ஜப்பானில் ஆளும் லிபரல் டெமக்ரடிக் கட்சியினர் நடத்திய வாக்கெடுப்பில் 534 உறுப்பினர்களில் 377 பேர் யோஷிஹைட் சுகாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
71 வயதான யோஷிஹைட் சுகா சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, அட்டைப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து கல்வி பயின்றவர். அரசியலில் ஷின்சோ அபேவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான சுகா அரசியல் விவகாரங்களில் ஷின்சோவின் வழிமுறைகளையே பின்பற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.