இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருநாட்டு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அடிக்கடி எல்லையில் அத்துமீறுதல் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சீனா உளவு பார்ப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரை ஷென்ஹுவா என்ற சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனம் உளவு பார்ப்பதாக பிரபல இந்திய ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்க ஊடகம் ஒன்றிலும் சீன அதிபர் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த நேரம் பார்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.