தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று உள்ளதா? அமைச்சர் ம.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (20:05 IST)
ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில்,இன்று ஓமந்தூர் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்   மா .சுப்பிரமணியன் : ஒமிக்ரான்  தொற்று இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என  தெரிவித்துள்ளார். மேலும், ஓமந்தூர் மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில் 28   முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இன்று, இங்கிலாந்து நாட்டில்   ஒமிக்ரான்  தொற்று பதித்த ஒருவர் முதன் முதலாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்