புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (10:45 IST)
ஒரு நாட்டில் பிறந்து இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

தங்கள் வாழ்வாதாராத்துக்காக வெளிநாடு சென்று பின்னர் அந்த நாட்டிலேயே தங்கி வாழும் பல கோடிக்கணக்கான நபர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அப்படி வெளிநாடுகளில் தங்கியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். இந்தியாவில் இருந்து சுமார் ஒரு கோடியே 80 லட்சம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இப்படி புலம்பெயர்பவர்களில் அமெரிக்காவில்தான் அதிக நபரகள் குடியேறுவதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்