நட்பு நாடுகளுக்கு உதவ 10 நாளில், 1 லட்சம் வென்டிலேட்டர்கள் – அதிபர் டிரம்ப்

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (13:09 IST)
நட்பு நாடுகளுக்கு உதவ 10 நாளில், 1 லட்சம் வென்டிலேட்டர்கள் – அதிபர் டிரம்ப்

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உலகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அடுத்த 10 நாட்களில்  1 லட்சம் வெண்டிலேட்டர்களை தயாரித்து தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரொனா தொற்றால் பாதிப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் ஜான்சனிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த டிரம்ப், அப்போது அவர் தனது நாட்டிற்கு முதல் உதவியாக வென்டிலேட்டர்கள்தான் என டிரம்ப் கூறியுள்ளார்.

எனவே, உலக வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா விரையில் 1 லட்சம் வென்டிலேட்டர்களை தயார் செய்து,  இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு உதவ உள்:ளதாக தெரிவித்துள்ளார் டிரம்ப்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்