முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே
இந்த நிலையில் மன்மோகன் சிங் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் குணமாக கடவுளை வேண்டிக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது