ஆங்கிலம் தெரியாததால் கேலி செய்த ஹோட்டல் உரிமையாளர் ! வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (21:44 IST)
பாகிஸ்தான் நாட்டிலுள்ள ஹோட்டலில் பணிபுரியும் மானேஜருக்கு ஆங்கிலம் தெரியாததால் அவரைக் கேலி செய்துள்ளார் உரிமையாளர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாபாஸ்த்தில் cannoli by café soul என்ற  பிரபல ஹோட்டர் இயங்கி வருகிறது. இங்கு மானேஜராஜ பணிபுரிந்து வருபவருக்கு ஆங்கிலம் தெரியாது.

இதுதெரிந்தும்கூட அந்த ஹோட்டலில் உரிமையாளர் தியா மானேஜரை கெலி செய்துள்ளார்.

அதில், தியா தனது தோழிகளுடன் உணவகத்தில் அமர்ந்துகொண்டிருக்க, உஸ்மா என்பவர், அவரிடம்  ஆங்கிலத்தில் பேச முடியுமா எனக் கேட்கிறார். மேனேஜர் சரி என்கிறார். அப்போது மானேஜர் ஆங்கிலத்தில் பேச முடியாமல் சிரம்படுகிறார். அதைப் பார்த்து உரிமையாளர் அவரது தோழிகளும் சிரிக்கின்றனர்.

மேலும் தியா,கடந்த 9 ஆண்டுகளாக இவர் மானேஜராகப் பணிபுரிகிறார். அவருக்கு நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம் என்றூ கூறி மானேஜரைக் கேலி செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தற்போது பாகிஸ்தானியர்கள் #BoycottCannoli என்ற ஹேஸ்டேக் உருவாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்