போலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது.
இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த சாலை சுத்தம் செய்யப்படும் என்றும் அதற்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும் மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலந்து நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சாலையில் கொட்டிய சாக்லேட் திரவத்தை பார்க்க அந்த பகுதியில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.