நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு; எம்பிக்கள் பிணைக் கைதியாக சிறைபிடிப்பு: ஈரானில் பதற்றம்!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (12:42 IST)
ஈரான் நாடாளுமன்றத்தில் மர்ம நபர்கள் நுழைந்து தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். எம்பிக்கள் சிலரையும் அவர்கள் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்திருக்கின்றனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


 
 
கத்தார் நாடு தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்து வருவதாக அந்த நாட்டுடனான உறவை சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் துண்டித்துள்ளது. அதற்கான பிரகடனத்தையும் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தால் அரபு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் கும்பலாக இன்று நுழைந்துள்ளனர். அவர்கள் உள்ளே நுழைந்து அதிரடியாக எம்பிக்கள் சிலரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்து வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மர்ம நபர்களுக்கும், ஈரான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
 
எம்பிக்களை மீட்க பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள வழிபாட்டு தலம் ஒன்றிலும் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்