வழக்கு போட்டாலும் விவசாயிகளுக்கு சப்போர்ட் பண்ணுவேன்! – க்ரேட்டா தன்பெர்க் திட்டவட்டம்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (17:27 IST)
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியதற்காக க்ரேட்டா தன்பெர்க் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக க்ரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாப் பாடகி ரிஹானா, சிறுமி க்ரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டர் பதிவிட்டிருந்த, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள சிறுமி க்ரேட்டா தன்பெர்க் ”விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். அச்சுறுத்தலை கண்டு பின்வாங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்