தொடரும் விவசாயிகள் போராட்டம்: அமெரிக்கா கூறுவது என்ன?

வியாழன், 4 பிப்ரவரி 2021 (09:33 IST)
இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் எட்டப்படவில்லை. 
 
இந்நிலையில் சமீப காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக டெல்லியில் பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை, வளரும் ஜனநாயகத்தின் அடையாளமாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்ச நீதிமன்றமும் இதையே கூறி உள்ளது. 
 
இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது.
 
இன்டர்நெட் உட்பட தகவல் தொடர்புகள் தடையின்றி கிடைப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது மற்றும் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்