பாலியல் அடிமையாக சிக்கிய பெண், ஐ.நா. தூதராக நியமனம்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (16:24 IST)
ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பாலியல் அடிமையாக சிக்கி தப்பிய பெண், ஐ.நா. தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


 

 
யாஸிதி பழங்குடி இனத்தை சேர்ந்த நாடியா முராத பாஸி(23) என்ற பெண், மனித கடத்தலில் தப்பியவர்களின் கண்ணியத்திற்கான ஐ.நா. தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஈரான் வடகிழக்கு பகுதியில் உள்ள கோசோ என்ற கிராமத்தில் கடத்தப்பட்டார். பின்னர் மொசூல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பயங்கரவாதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
 
ஐ.எஸ்.பயங்கரவாதிகளால் பலமுறை விற்பனை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய நாடியா ஜெர்மனியில் சென்று அடைக்கலம் அடைந்தார்.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வாக்குமூலம் அளித்த நாடியா, அவருக்கு நடந்த கொடுமைகளை பட்டியலிட்டார். மேலும் பயங்கரவாதிகளிடம் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலை குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
 
ஐ.நா. நல்லெண்ணத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நாடியா, மனித கடத்ததலில் தப்பியவர்கள், குறிப்பாக அகதிகள் மற்றும் பெண்களின் அவநிலை குறித்து விழிப்புணர்வை எழுப்புவதில் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இவரது முக்கியமான கோரிக்கை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கும் பெண்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.   
அடுத்த கட்டுரையில்