அல்லாவுக்கு பிறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்த அமெரிக்க அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (21:54 IST)
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ஏழு இஸ்லாம் நாடுகளுக்கு தற்காலிகமாக விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது



 


இந்நிலையில் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவில் இஸ்லாமிய தம்பதியருக்கு பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் தர அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதற்கு காரணம் அந்த குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் ஷாலியாக் கிரேஸ்புல் லொரரினா அல்லாஹ் என்பதுதான்

இந்த பெயரில் அல்லா என்று இருப்பதால் இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் தர முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அல்லா என்ற அரபி மொழி சொல்லை பயன்படுத்துவது ஜோர்ஜியா மாகாண சட்டத்திற்கு முரணானது என்று அந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்