நமது அண்டை நாடான வங்கதேசத்தில் காளி கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சாமி சிலையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது அண்டை நாடான வங்கததேசத்தில் உள்ள ஜெனைடாவில் பிரசித்தி பெற்ற காளி கோவில் உள்ளது.
இங்கு, தஸரா வைழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த விழா முடிந்த அடுத்த நாள்( நேற்று) காளி கோயில் வைக்கப்பட்டிருந்த சிலை சேதப்படுத்திய சம்பவம் அங்குள்ள பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிலையை 2 கிமீ தூரம் வரை மர்ம நபர்கள் வீசியிருந்தனர். இத்குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இதுகுறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீக காலமாக வங்கதேச நாட்டில் சிறுபான்மை மதத்தினர் வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.