ஸ்பெயினில் பரவும் காட்டுத் தீ: பதறவைக்கும் வீடியோ

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (16:18 IST)
ஸ்பெயின் நாட்டின் கிரான் கனேரியா தீவில், காட்டுத் தீ பரவியதால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான தீவு கிரான் கனேரியா. இந்த தீவில் 9 லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தீவின் வனப்பகுதியில் திடீரென தீ பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை அந்நாட்டின் அரசு வெளியேற்றி, அருகிலுள்ள பாதுகாப்பான நகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்டுத்தீயில் 2,500 ஏக்கர் நிலங்கள் கருகின.

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்