நிர்மலா சீதாராமன் நல்லவர், சில சமயம் என்னை போலவே குறிவைக்கப்படுவார்: பிடிஆர்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (16:58 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லவர் என்றும் அவருக்கு என்னை விட அவருக்கு பல மடங்கு பொறுப்பு இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் என்னை போலவே குறிவைக்கபடுகிறார் என்றும் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நேற்று டுவிட்டரில் பல்வேறு கேள்விகளுக்கு நிதி அமைச்சர் பிடிஆர்பழனிவேல் ராஜன் அவர்கள் பதில் அளித்தார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு என்ன அட்வைஸ் சொல்ல விரும்புவீர்கள் என்று கேட்டபோது நிர்மலா சீதாராமன் ஒரு தமிழர், மதுரையில் பிறந்து வளர்ந்தவர், எப்போதும் அன்புடன் பழக கூடியவர், தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
 
என்னை விட அவரது பணி 10 மடங்கு கடுமையானது. ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தில் அவருடன் நேரடியாகவே ஆலோசனை செய்து உள்ளேன். மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் நடத்தவும் அவர் சம்மதித்துள்ளார். இந்த நிலையில் சில நேரங்களில் அவர் தவறாக குறிவைக்கப்படுகிறார். என்னைப்போலவே தவறான இடங்களில் இருந்து விடுவார். நான் என்ன அவருக்கு அட்வைஸ் செய்வது என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்