ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை - கியூபாவில் அதிர்ச்சி

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (11:49 IST)
கியூபா நட்டின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான ஃபிடல்  காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட் தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவிற்கு பிறந்தவர் டியஸ் பலர்ட்(68). இவரை அனைவரும் பெடிலிட்டோ (Fidelito) என அழைப்பதுண்டு. மேலும், லிட்டில் ஃபிடல் எனவும் இவர் அழைக்கப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டதாக கியூபா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த விவகாரம் கியூபா மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்