இந்நிலையில், கோவை மாவட்டம் சோமனூரில் 12ம் வகுப்பு படித்து வரும் அருள்செல்வன் என்ற மாணவரை, வேதியியல் ஆசிரியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானம் அடைந்த அருள்செல்வன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவர்கள் தவறு செய்தால் கண்டிப்பது ஆசிரியரின் கடமைதான். ஆனால், அதை அவமானமாக கருத்தி மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை எடுக்கும் போது, அந்த மரணத்திற்கு ஆசிரியர்களே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டி, அதன் காரணமக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.