பிரபல மாடல் அழகியை சரமாரியாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (12:05 IST)
ஈராக்கில் பிரபல மாடல் அழகி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈராக்கில் பெண்கள் மீது நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது தான் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகிறது.
 
ஈராக்கின் பிரபல இளம் மாடல் அழகி தாரா பாரஸ் (22), அங்குள்ள கட்டுப்பாடுகளை எல்லாம் பின்பற்றாமல் மாடர்னாக டிரஸ் செய்து கொள்வதும், கையில் பச்சைக் குத்துக் கொள்வதுமாய் இருந்துள்ளார். இவரை பலருக்கு பிடித்து போய்விட்டது. பலர் சமூக வலைதளத்தில் தாராவை பின்பற்ற தொடர்ந்தனர்.
இது கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுக்கும் என தீவிரவாதிகள் தாராவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தாரா இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
 
இதனால் கடும் கோபமடைந்த தீவிரவாதிகள் வெளியே சென்ற தாராவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தாராவைப் போல் யாராவது கலாச்சாரத்தை மீறி நடந்து கொண்டால் இதே நிலைமை தான் என தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் ஈராக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்