பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரர் கைது

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (20:37 IST)
உலகில் மிகபெரிய தொழில் அதிபராக வலம் வருபவர் லட்சுமி மிட்டல். உலகில் உள்ள மிகப்பெரிய  பணக்காரர்கள் வரிசையிலும் இடம் பிடிதுள்ள இந்தியர்தான் இவர். உலோகமாக எக்கு மற்றும் தொலைதொடர்பு நிறுவமான ஏர்டெல்லிலும் அவரது கம்பெனி கொடிகட்டி பறக்கிறது.
தொழில் அதிபர் லட்சுமி மிட்டலின் இளைய சகோதரர் பிரமோத் மிட்டல் ஆவார் . அவருக்குச் சொந்தமாக போஸ்னியாவின் லுகவக் நகரில் ஜிகில் என்ற ஒரு நிறுவனம் இயங்கிவருகிறது. 
 
இந்த நிறுவனத்தில் ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனத்தின் கண்காணிப்பு வாரிய தலைவராக இருக்கும் பிரமோத் மிட்டலை, இன்று அந்நிறுவனத்தில் நுழைந்த  போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
 
அதிகார துஷ்பிரயோகம் செய்து   பல பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது அடுக்கடுக்காகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பிரமோத் மிட்டல் மட்டுமல்லாது அந்நிறுவனத்தின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச்சார்யா மற்றும் அவருடன் மேலும் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அதாவது அதிகார துஷ்பிரயோகத்தின் கீழ் சுமார்  20 கோடி ( இந்திய மதிப்பு )ரூபாய் வரை பிரமோத் மிட்டல் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டிக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில் பிரமோத் மிட்டல் மீதான் குற்றச்சாட்டிகள் உறுதிசெய்யப்பட்டால் அவருக்கு சுமார் 45 ஆண்டுகள் வரை தண்டணை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இந்தியா மற்றும் போஸ்னியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்