வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தர முடியாது - பேஸ்புக் திட்டவட்டம்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (12:06 IST)
வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தர முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படும் வகையில் பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனாலிடிகா' நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில், பேஸ்புக் வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
 
சமீபத்தில் நடைபெற்ற சட்ட வல்லுனர்கள் கூட்டத்தில்,  வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்காக பேஸ்புக் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தரும்படி மார்க்கிற்கு உத்தரவிட்டது.
 
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்கள் திருடப்படவில்லை. எனவே வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீடு தொகை வழங்க முடியாது என பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்