திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் நேற்று துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது.
எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 எண் கொண்ட விமானம் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது. அந்த விமானத்தில் 275 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என மொத்தம் 282 பேர் பயணித்தனர்.
நேற்று மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, நிலை தடுமாறி விமானத்தின் வால் பகுதி தரையை தட்டியது. இதையடுத்து அதன் வலது பக்க என்ஜின் ரன்வேயில் மோதி தீப்பிடித்தது.
இதையடுத்து உடனடியாக தீயணப்பு படை வீரர்கள் தீயை அணைத்ததோடு மீட்பு பணியில் ஈடுபட்டு 282 பயணிகளை 90 வினாடிகளுக்குள் காப்பாற்றினர். இதன்பிறகு இன்ஜின் வெடித்து பெரும் நெருப்பு வெளிப்பட்டதை தொடர்ந்து அந்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இருப்பினும் விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரான ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.