உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் எலான் மஸ்க் கணிப்பு

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (23:16 IST)
உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் என்று டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா  மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியவருமான எலான் மஸ்க் எப்போதும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுபவர்.

இவர், ஜப்பான் மற்றும் சீனாவைப் போல் உலகளவில் மக்கள் தொகை பெருமளவு சரியும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 2022 ஆம் ஆண்டு வரலாற்றின் இல்லாத வகையில் பிறப்பு விகிதம் கடந்தாண்டை ஒப்பிடும்போது 5.1 %  குறைந்திருப்பதாக கூறியது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்திருப்பதும் இறப்பு விகிதம் 2 மடங்கு அதிகரித்திருப்பதும், மக்கள் தொகை சரிவைக் காட்டுகிறது. இதேபோல் உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் சரிவு ஏற்படும் என்று எசரித்துள்ளார்.

மேலும், சீனாவில்,  1 குழந்தைக்கொள்கை தற்போது இல்லை;  6 வருடங்களுக்கு முன்பே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது அரசு, ஆனாலும் இனி வரும் காலங்களில், ஒவ்வொரு தலைமுறையிலும், 40%  மக்கள் தொகையை சீனா இழக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்