12 மணி நேரம் வேலை, சனி-ஞாயிறு விடுமுறை இல்லை: எலான் மஸ்க் அடுத்த அதிரடி

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (15:12 IST)
பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைதளத்தை 44 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் 
 
புளூடிக் பயனாளிகளுக்கு எவ்வளவு கட்டணம் என நிர்ணயம் செய்த நிலையில் தற்போது ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் சனி ஞாயிறு விடுமுறை இல்லாமல் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது 
 
புளூடிக் செயல்முறை எஞ்சினியர்களுக்கு மட்டும் இந்த பணியை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை புளூடிக் பணம் செலுத்துபவர்களை சரிபார்க்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
மேலும் ஓவர் டைம் ஊதியம் மற்றும் வேலை நேரம் அதிகம் குறித்து எந்தவித விவாதம் செய்யக் கூடாது என்றும் ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் தினமும் 12 மணி நேரம் வாரம் ஏழு நாட்கள் வேலை செய்ய முடியாதவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்