காரில் அடிப்பட்ட குட்டி யானையை காப்பாற்ற துடித்த யானைகள் (வீடியோ)

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (16:24 IST)
ஜிம்பாப்வேயில் காரில் அடிப்பட்ட குட்டி யானையை காப்பாற்ற யானைகள் துடித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜிம்பாப்வே நாட்டின் ஹவேஜ் தேசிய வன உயிரியல் பூங்காவில் காரில் அடிப்பட்ட குட்டி யானையை காப்பற்ற மற்ற யானைகள் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை ஹெய்தி என்ற பெண் வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-
 
நான் பூங்காவில் வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை வேகமாக கடந்து சென்ற கார் ஒன்று குட்டி யானை மீது மோதிவிட்டு சென்றது. இதைக்கண்ட தாய் யானை அந்த குட்டி யானையை காப்பாற்ற போராடியது. அந்த தாய் யானைக்கு மற்ற யானைகள் உதவி செய்தது. இதை பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Kruger Sightings
அடுத்த கட்டுரையில்