துருக்கியில் மீண்டும் நில நடுக்கம்-- கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:34 IST)
துருக்கி நாட்டில்  இன்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், துருக்கியில் 10 மாகாணங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆகப் பதிவானதால், உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். பல காயமடைந்துள்ளனர். மீட்பு படைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தியா, உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.6 அளவாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்திலும், கட்டிடங்கள் இடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்