கொரோனா நெருக்கடியில் எலி போல சிக்கியும் லாபம் பார்த்த சீனா!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (08:51 IST)
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் சீனாவின் பொருளாதாரம் 2.3% வளர்ச்சி அடைந்துள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை மிரட்டி வரும் கொரோனா சீனாவின் வூகான் நகரில் உருவெடுத்தது. இதனால் உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடான சீனா பொருளாதார சரிவை எதிர்கொண்டது. 
 
சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக இறங்கியது. இதன் பலனாக சீனாவின் பொருளாதாரம் 2.3% வளர்ச்சி கண்டுள்ளது. 
 
இருப்பினும் சீன வரலாற்றில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியையே கண்டுள்ளது. ஆம், கடந்த 1976 ஆம் ஆண்டு சீன பொருளாதாரம் 1.6% வளர்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்