3 வது முறையாக உருமாற்றம் - கொரோனா 3வது அலை எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:14 IST)
இன்னொரு வகையில் 3 வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது.

 
இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றின் பரவலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இன்னொரு வகையில் 3 வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது.
 
ஆம், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது பிரேசிலிலும் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
அதோடு, தற்போது வைரஸ் மரபணு மாற்றம் அடைந்துள்ளதால் 3வது அலை தாக்கக் கூடும் என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்