டோக்கியோ நகரத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (17:13 IST)
ஒலிம்பிக் நடைபெற்று வரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் மேலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்ப்புகள் எழுந்தன.

ஆனாலும் பாதுகாப்போடு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது போட்டிகள் தொடங்கி நடந்துவரும் நிலையில் டோக்கியோ நகரில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இன்று  மட்டும்  2,848 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் பரவல் காரணமாகவே தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்