உலகம் முழுவதும் அதிக ப்ளாஸ்டிக் மாசு! – டாப் லிஸ்டில் உள்ள நிறுவனங்கள்!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (13:46 IST)
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் அதிக பிளாஸ்டிக் குப்பைகளை ஏற்படுத்தும் நிறுவனங்கள் பட்டியலில் பெப்சி, கொகொ கோலா நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

பருவ நிலை மாற்றம், வெப்பமயமாதல் உள்ளிட்ட சுற்றுசூழல் பிரச்சினைகள் உலகம் எதிர்கொண்டு வருவதில் முக்கிய காரணியாக பார்க்கப்படுவது பிளாஸ்டிக் குப்பைகள். நிலத்திலும், நீரிலும் கலக்கும் இந்த குப்பைகளால் பல்வேறு நாடுகள் பெரும் சுகாதார பிரச்சினையை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள 15000 தன்னார்வலர்களை கொண்டு நாடு முழுவதும் சுழற்சி முறையில் பொது இடங்களில், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான ப்ளாஸ்டிக் பொருட்கள் கோகோ கோலா, பெப்சி மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர்பான பொருட்களின் குப்பைகள் என தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், உணவு பைகளை பயன்படுத்துவதை குறைத்தல், மறுசுழற்சியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் ப்ளாஸ்டிக் குப்பை அதிகரித்தலை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்