போலந்தில் தோன்றிய மோனோலித்! விலகாத மர்மம்! – பீதியில் மக்கள்!

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (13:09 IST)
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தோன்றி பீதியை ஏற்படுத்திய மோனோலித் தற்போது போலந்தில் தோன்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஏதாவது சில புதிரான விஷயங்கள் நடக்கும்போது அது மக்களிடையே அதிகமாக சென்றடைந்து விடுவதுடன் பல்வேறு யூகங்களையும் உருவாக்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது உலகின் பல நாடுகளில் தோன்றி மறையும் மோனோலித் கடந்த சில வாரங்களாக மக்களிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

முதன்முதலாக அமெரிக்காவின் உடா பகுதியில் பாலைவனத்தில் தோன்றிய மோனோலித் அதற்கு பிறகு இங்கிலாந்து உள்ளிட்ட சில பகுதிகளிலும் தோன்றி சில நாட்களில் மறைந்தது. இது ஏதும் விநோத சம்பவமா அல்லது மர்ம நபர்கள் யாராவது செய்யும் திட்டமிட்ட செயலா என பலர் குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது போலந்து நாட்டிலும் இந்த மோனோலித் தோன்றியுள்ளது. இதனால் மோனோலித் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்