சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிப்பு

Webdunia
புதன், 11 மே 2022 (23:32 IST)
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது அண்டை நாடு சீனா. இந்த நாட்டின் அதிபராக இருப்பவர் ஜி  ஜின்பிங். இவர்  கடந்தாண்டு இறுதியில் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கு அவர் அறுவை சிகிச்சைக்குப் பதிலாக சீன பாரம்பரிய மருந்துகளை எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

மேலும், பீஜிங் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, வெளி நாட்டுத் தலைவர்களை ஜின்பிங் தவிர்த்து வந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இ ந்த நிலையில் ஜின்பிங் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்