சீனாவின் எக்ஸ்2 பறக்கும் மின்சார கார் சோதனை ஓட்டம்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (21:52 IST)
எக்ஸ்ட்2  என்ற பெயரிடப்பட்டுள்ள  2 பேர் அமர்ந்து செல்லும் வகையில் ஒரு பறக்கும் காரை, ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது

இன்றைய நவீன உலகில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. மக்களின் வேகம், பொருளாதாரம், மக்களின் தேவை ஆகியவற்றிற்கு ஏற்ப தொழில் நுட்பங்களின் தாக்கம் அதிகரிக்கிறது.

அந்த வகையில், சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. இந்தக் கார்களை சர்வதேசச் சந்தையில் அறிமுகப்படுத்ததும் பணியில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில், எக்ஸ்ட் என்ற பெயரிடப்பட்டுள்ள  2 பேர் அமர்ந்து செல்லும் வகையில் ஒரு பறக்கும் காரை, ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. இதில்,4 முலைகளில் நான்கு இறக்கைகள் இருக்கிறது. இந்தக் கார் ஆளின்றி தானியங்கியாக இயக்கப்பட்டது. இது வருங்காலத்தில் சாதனை படைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்