விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீப காலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் மேற்புறத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல கோடி ஆண்டுகள் முன்னதாக தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தகவல் செவ்வாய் ஆராய்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது.