சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டுவித்து வருகிறது. இருப்பினும் கொரோனா எங்கு ஆரம்பித்ததோ அங்கு தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள பல மாகாணங்களில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும் தொழில்கள் தொடங்கபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் சீனா தற்போது 5ஜி டவரை நாடு முழுவதும் நிறுவும் பணியை தொடங்கி விட்டது. முதல் கட்டமாக உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்டில் 5ஜி டவரை சீனா நிறுவியுள்ளது என்பதும் எவரெஸ்டில் 5ஜி டவரை நிறுவிய முதல் நாடு சீனா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது
திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் சீனா 5ஜி டவரை நிறுவி உள்ளதை அடுத்து சீனா முழுவதும் சிக்னல் சிறப்பாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில் அதிவேக இன்டர்நெட் பயன்பாடு பொதுமக்களுக்கு தேவை என்பதால் 5ஜி மிக வேகமாக நாடு முழுவதும் அமைக்கும் பணியில் சீனா, ஈடுபட்டுள்ளது என்பதும், சீனாவின் இந்த முயற்சிக்கு அந்நாட்டு மக்களிடம் இருந்து மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது