25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை: உலக நாடுகள் திணறல்

புதன், 22 ஏப்ரல் 2020 (07:50 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளதால் உலக நாடுகளிடையே பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
 
மேலும் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,77,459ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,90,224ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கொரோனாவால் பலியான மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,744ஆகவும் பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆகவும் உயர்ந்துள்ளது. 
 
அமெரிக்காவை அடுத்த இங்கிலாந்தில் கொரோனாவால் மொத்தம் 129,044 பெர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்  ஸ்பெயினில் 204,178 பேர்களும், இத்தாலியில் 183,957 பேர்களும், பிரான்ஸ் நாட்டில் 158,050 பேர்களும், ஜெர்மனியில் 148,453 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
 
கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 828 பேர்களும், ஸ்பெயினில்  430 பேர்களும், இத்தாலியில் 534 பேர்களும்,  பிரான்ஸ் 531 பேர்களும், ஜெர்மனி 224 பேர்களும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்