இவன் நம்பல பராட்டுறான திட்றானா? அமெரிக்காவை கன்ஃபூஸ் பண்ண சீனா!!

Webdunia
புதன், 19 மே 2021 (13:30 IST)
உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூகளை வழங்கும் அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்றுள்ள சீனா  அமெரிக்காவை இகழ்ந்தும் உள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16.48 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை அடுத்த 9 மாதங்களுக்கு உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அறிவித்தார்.
 
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சீனா வரவேற்றுள்ளது. இது குறித்து சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தடுப்பூசி உதவி மற்றும் வளரும் நாடுகளுக்கு உறுதியான உதவி ஆகியவற்றின் உறுதிப்பாட்டை அமெரிக்கா வழங்க முடிந்தால் நாங்கள் அதை வரவேற்கிறோம். அதேசமயம் ரஷியா மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் குறித்த ஜோ பைடனின் கருத்து வெறுக்கத்தக்கது.
 
அமெரிக்காவைப் போலல்லாமல், சீனா உலகில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது வழி நடத்தவோ தடுப்பூசிகளை பயன்படுத்தாது. எங்கள் நோக்கம் உயிரை காப்பாற்ற முடிந்த வரை வளரும் நாடுகளுக்கு உதவுவதை தவிர வேறொன்றுமில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்