கொரோனா தடுப்பூசி: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

திங்கள், 17 மே 2021 (07:51 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியை மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போடுவது சிரமம் இருப்பதால் அவர்களுக்கு சிறப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தமிழக அரசு, மாற்றுத்‌ திறனாளிகள்‌ எந்தவித சிரமுமில்லாமல்‌ தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும்‌ சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ மாற்றுத்திறனாளிகள்‌
முன்னுரிமை அடிப்படையில்‌ தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்‌.
 
அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ பொது வரிசை அல்லாது மாற்றுத்‌ திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்‌.அனைத்து தடுப்பூசி மையங்களிலும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்கான சாய்வுத்‌ தளம்‌ அமைக்கப்பட வேண்டும்‌. தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறையுடன்‌ இணைந்து மாற்றுத்‌ திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள்‌ அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்